கன்னியாகுமரிஅருகே தடாகை மலையின் அடிவாரத்திலுள்ள தெள்ளாந்தி கிராமத்தில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு கோரி விவசாயக் குடும்பத்தினர் வாழைத்தார்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தாடகை மலை அடிவாரத்தில் உள்ள தெள்ளாந்தி கிராமத்தில் வாழை, தென்னை மரங்கள் நடப்பட்டு விவசாயம் நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், தற்போது யானைகள் குட்டிகளுடன் வாழைத் தோட்டங்களில் நுழைந்து வாழை, தென்னை மரங்களை அழித்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இங்கு வனத்துறை சார்பில் வேலிகள் அமைக்கப்பட்டபோதும், வன விலங்குகளால் விவசாயம் பாதிப்படைந்து வருகிறது.
வாழைகளை சேதப்படுத்திய யானைக் கூட்டம் - உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று கும்பலாக வாழைத் தோட்டத்திற்குள் நுழைந்த யானைகள் கூட்டம் சுமார் 900 வாழை மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தின. இதற்கு முன்னதாக, இதேபோன்று யானைகள் வாழைத் தோட்டத்திற்குள் நுழைந்து சேதப்படுத்தியதற்கு அரசு எவ்வித நிவாரணமும் வழங்காத நிலையில், இந்த முறையாவது விவசாயிகளின் வாழ்வாதார நிலையை கருத்திற்கொண்டு இச்சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என இன்று (செப்.10) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சேதமடைந்த வாழைத்தார்களுடன் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: 'நூறு ஏழை மாணவர்களை பரிசாகத் தாருங்கள்' - வித்தியாசமான திருமண பரிசு கேட்கும் இளைஞர்