கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிப்பு சங்கம் சார்பில், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் புகார் மனு ஒன்று வழங்கியுள்ளது. அந்த புகார் மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 44 கடலோர கிராமங்கள் உள்ளதாகவும், இந்த 44 கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாக கொண்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பொது பணி துறையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி என்ற இடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்றும், எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்றாமல், பொதுப்பணி துறையினர் இந்த தடுப்பணையை கட்டி வருவதாக தெரிவித்துள்ளனர்.
கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் உரிய அனுமதி வாங்காமலும், எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமலும் இந்த தடுப்பணையை துறைமுக பகுதியில் கட்டி வருவதாகவும், இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், பொது பணித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இந்த தடுப்பணை கட்டுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் உரிய அனுமதி வாங்கி தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. எனவே கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு இதற்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளனர்.