கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் பூஜிதகுரு பாலஜனாதிபதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியைச் சுற்றியுள்ள ரதவீதி தற்போது கரடுமுரடாக காணப்படுகிறது. இது விரைவில் சரி செய்யப்பட்டு மணல் நிரப்பி சமன் செய்யப்பட்டு பதி வளாகம் எப்போதும் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், தலைமைப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தற்போது கழிவறை வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால் அவர்களின் வசதிக்காக பதியின் வளாகத்தில் கூடுதலாக இன்னும் 65 கழிப்பறைகள் இந்த தை மாதத் திருவிழாவிற்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.