கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய பொருள்கள் விற்பனைசெய்யும் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டது.
பின்னர், பொதுமக்களின் கோரிக்கையையடுத்து, தமிழ்நாட்டில் பேக்கரிகளும் இயங்கலாம் என அரசு அறிவித்ததையடுத்து, இன்று குமரி மாவட்டத்தில் பேக்கரிகள் வழக்கம்போல் செயல்பட்டன.
கடைகளிலிருந்த பழைய உணவுப்பொருள்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, புதிதான பொருள்கள் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.