தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்த அமைப்புகள்! - babri masjid destroyed date

பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று தமிழ்நாடு முழுவதும் முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களை நடத்தினர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்.  babri masjid destroyed date  islamic parties protest on babri masjid
babri masjid destroyed date protest

By

Published : Dec 7, 2019, 12:52 PM IST

அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்பினர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தில் கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்வின் நினைவு தினமான நேற்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முஸ்லீம் அமைப்பு, கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட வாரியாக போராட்டங்களை முன்னெடுத்தனர்.

எங்கெங்கே இஸ்லாமியர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர் என்பது குறித்த தொகுப்பு கீழ்வருமாறு:

அயோத்தி வழக்கு கடந்துவந்த பாதை...!

சேலம் மாவட்டம்:

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுபான்மை சமுதாயத்தின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் சேலத்தில் நடந்த போராட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்:

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாபர் மஸ்ஜித் நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் ஷா நவாஸ் கான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்களின் இறை இல்லமான பாபர் மசூதி மீட்டு கொடு என முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் கோயம்புத்தூரில் நடந்த போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட 75 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் கன்னியாகுமரியில் நடந்த போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலை முன்பு 200க்கும் மேற்பட்டோர் நடத்தினர். காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு தலைமையில் மூன்று காவல் ஆய்வாளர்கள் உள்பட 50 சீருடை பணியாளர்கள் இந்த உரிமை மீட்புப் போராட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் கிருஷ்ணகிரியில் நடந்த போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம்:

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் குதர துல்லா தலைமையில் பாபர் மசூதி தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்டது. இதேபோல் எஸ்டிபிஐ கட்சி சார்பிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பெரம்பலூரில் நடந்த போராட்டம்

வேலூர் மாவட்டம்:

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றம் கழகம் சார்பில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரித்தும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறு சீராய்வு செய்து இஸ்லாமியர்களுக்கும் நீதி வழங்கிட வலியுறுத்தியும் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தடையை மீறி மாலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாபர் மசூதி விவகாரத்தில் அரசின் நிலைபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேலூரில் நடந்த போராட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details