கன்னியாகுமரி: டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தண்டவாளம் முழுவதும் சோதனை செய்து வருகின்றனர்.
இதே போன்று ரயில் பெட்டிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜ கோயில், உள்ளிட்ட முக்கிய கோவில்கள் மற்றும் சுற்றுலா மையமான கன்னியாகுமரியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.