கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு தலைமை பதியில் அய்யா வைகுண்டரின் 188ஆவது அவதார தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இன்று காலை நாகர்கோவிலில் உள்ள நாகராஜா திடலிலிருந்து புறப்பட்ட பேரணியில் காவி கொடி ஏந்திய பல்லாயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்களும், முத்துக்குடை ஏந்திய பெண்களும், 1000க்கும் மேற்பட்ட வாகனங்களும் அணிவகுத்து சென்றன.
மேலும், பேரணியில் நடைபெற்ற சிறுவர் சிறுமியரின் கோலாட்ட நிகழ்ச்சிகளையும் அனைவரும் பார்த்து ரசித்தனர். இப்பேரணியின் போது 'அய்யா! ஹர ஹர சிவனே' என்ற நாமத்தையும் உச்சரித்தபடியே சென்ற பக்தர்கள், நடைபயணமாக தலைமை பதியான சுவாமிதோப்புக்கு சென்றனர்.