கன்னியாகுமரி மாவட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாக மதுபானம், கள்ளச்சாராயம் அருந்துவதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவகலத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தொடங்கிவைத்தார். இந்தப் பேரணியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாதைகளுடன் கலந்துகொண்டு பரப்புரை செய்தனர்.
மதுபானம், கள்ளச்சாராயம் அருந்துவதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமே மதுதான் என்றும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் மற்றும் உடலில் கல்லீரல் பாதிப்பு, மூளை, நரம்பு மண்டலங்கள் பாதிப்பு போன்ற தீமைகளிலிருந்து விடுபட மதுவை ஒழிப்போம் என்றும் பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியினர்.
இதையும் படிங்க:ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரை இயற்கை விவசாயியாக மாற்றிய நம்மாழ்வார்