ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி உலக போலியோ தினமாக அரசு அனுசரித்து வருகிறது. இந்த நோய் இந்தியாவில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதால், தற்போது ஆண்டுக்கு ஒருமுறை குழைந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டுவருகிறது.
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை போலியோ விழிப்புணர்வு பேரணி! - போலியோ விழிப்புணர்வுப் பேரணி
கன்னியாகுமரி: உலக போலியோ தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற்றது.
போலியோ விழிப்புணர்வுப் பேரணி
போலியோ நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை விழிப்புணர்வு பைக் பேரணி நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கிய பேரணியை, ரோட்டரி மாவட்ட போலியோ தலைவர் சண்முகம் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி துணை கவர்னர்கள் பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரியில் தொடங்கிய பேரணி நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை வழியாக களியக்காவிளையில் சென்று நிறைவடைந்தது.