கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி முதல் புதூர் வரை உள்ள மிக முக்கியமான கால்வாய், விக்டோரியா மகாராணி பெயரில் உள்ள ஏவிஎம் கால்வாயாகும். பண்டையக் காலத்தில் படகுப் போக்குவரத்து நடந்த ஏவிஎம் கால்வாயானது, ஆக்கிரமிப்புக் காரணமாக தற்போது சிறிய நீரோடையாக மாறியுள்ளது.
சுகாதாரமற்று காட்சியளிக்கும் பாரம்பரியமிக்க ஏவிஎம் கால்வாய்! - சுகாதாரமற்ற நிலையில் உள்ள ஏவிஎம் கால்வாய்
கன்னியாகுமரி: சுகாதாரமற்ற நிலையிலுள்ள பாரம்பரியமிக்க ஏவிஎம் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி தேங்காய் பட்டணத்தில் அனைத்து கட்சியினரும் சமுக அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேங்காய் பட்டணம் பகுதியில் உள்ள இந்தக் கால்வாயில் குப்பைகளை கொட்டுவதாலும், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதாலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுவருகிறது. இதனால் இந்தப் பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்தக் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சியினரும் சமுதாய அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் குமார் உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ரயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் பணி - தொடங்கியது மத்திய அரசு!