தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் கால்வாய் சுத்தப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த ஆஸ்டின் எம்எல்ஏ - சானல் சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ

கன்னியாகுமரி: பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய்லில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணியை ஆஸ்டின் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

ஆஸ்டின் எம்எல்ஏ

By

Published : Nov 15, 2019, 5:26 AM IST

கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் வடக்கு ரதவீதியில் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு விவேகானந்தபுரத்தில் உள்ள குமரி சால்குளத்தின் உபரிநீர் மாதவபுரம், ஒற்றையால்விளை, விவேகானந்தபுரம், சர்ச்ரோடு வழியாக பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளத்தை வந்தடைகிறது.

இந்த கால்வாயில் பல இடங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் பெய்த தொடர்மழையில் குமரி மாவட்ட அணைகள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பிய போதும் இதுவரை தெப்பக்குளம் வறண்டே காணப்படுகிறது. இந்த தெப்ப குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.

கால்வாய் சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் எம்எல்ஏ

இந்நிலையில் கடந்த வாரம் இந்த பகுதியை ஆய்வு செய்த கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் எம்எல்ஏ இந்த கால்வாய் பகுதிகளை சுத்தப்படுத்தி தூர்வாங்கி இன்னும் 10 நாட்களுக்குள் தெப்பக்குளத்திற்கு சம்பந்தப்பட்ட துறையினர் தண்ணீர் கொண்டுவராவிட்டால் பேராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த்தார்.

இதை தொடர்ந்து இந்த கால்வாய் ஜேசிபி மூலம் சுத்தப்படுத்தப்படுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டது. இதை ஆஸ்டின் எம்எல்ஏ பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்டின் எம்எல்ஏ கால்வாயை சீரமைத்த பின் தெப்பக்குளத்திற்கு உடனடியாக தண்ணீர் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மணல்மேடு பேரூராட்சியில் எம்எல்ஏ திடீர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details