கன்னியாகுமரி மாவட்டம் கண்ணன்பதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்ணன்பதி குளம் உள்ளது. இந்தக் குளத்து நீரை அப்பகுதி மக்கள் விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தக் குளத்தின் கரைப்பகுதி இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏ ஆஸ்டின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் செலவில் குளத்தின் கரை கட்டப்பட்டுவந்தது. குளத்தின் கரைப்பகுதி கட்டுவதில் முறைகேடு நடப்பதாகவும், குறிப்பிட்ட அளவை விட குறைவாக கரைப்பகுதி கட்டுவதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின் எம்எல்ஏ குளத்தின் கரை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.