குமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சகாய செல்வன் (50). இவர் அழகப்பபுரம் பகுதியிலுள்ள உள்ள அரசு மதுபான கடையின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்றிரவு(ஜூலை13) விற்பனை முடிந்ததும், பணத்தை எடுத்துக்கொண்டு நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளார்.
அரசு மதுபானக்கடை மேற்பார்வையாளரை தாக்கி கொள்ளை முயற்சி - காவல்துறை விசாரணை
கன்னியாகுமரி: மயிலாடி கூண்டு பாலம் அருகே அரசு மதுபான கடை மேற்பார்வையாளரை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
அப்போது இவரை இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்துள்ளது. மயிலாடி அருகே உள்ள கூண்டு பாலம் அருகில் வரும் போது பின்னால் வந்த கும்பல் முன்னே சென்று இவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி, மிளகாய்பொடியை தூவியும், இரும்பு ஆயுதத்தால் அவரை பலமாக தாக்கியும் உள்ளனர்.
இதில் அதிர்ச்சியடைந்த மேற்பார்வையாளர் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் ஓடி வரவும், அடையாம் தெரியாத கும்பல் இவரை விட்டு விட்டு ஓடியுள்ளனர். மேலும் இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் அஞ்சுகிராமம் காவல்துறையினரும், விசாரணை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.