தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் மூன்று பேர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி! - தீக்காயம்

கன்னியாகுமரி: முன்விரோதம் காரணமாக மூன்று பேர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து தானும், பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Fire
Fire

By

Published : Dec 3, 2020, 3:41 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள கணபதிபுரம் சன்னதி தெருவைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் (40), சதீஷ் (40), காளி (40) இவர்கள் மூவரும் நண்பர்கள். இந்த மூவரும் சன்னதி தெரு நூலகம் முன் அமர்ந்து பேசிகொண்டு இருந்தனர். அப்போது, திடீரென்று அந்நூலகத்தின் எதிர்வீட்டில் வசிக்கும் தொழிலாளி ராஜசேகரன் (40) தன் கையில் கொண்டுவந்த பொட்ரோலை எடுத்து, அவர்கள் மூவரின் மீதும் ஊற்றி தீவைத்து கொழுத்தினார்.

பெட்ரோல் ஊற்றி மூவரை கொளுத்திய ராஜசேகரன்

இதனால் அவர்கள் மூவரும் பதறிபோய் அலறிக் கொண்டு அங்குமிங்கும் உடம்பில் தீயுடன் ஓடினர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் மூவரையும் காப்பாற்றி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீக்காயம் அடைந்தவர்கள்

இதில் சதீஷ், வெங்கடேஷுக்கு பலத்த தீக்காயத்துடன் சிகிச்சையில் உள்ளனர். காளிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தீவைத்து கொளுத்திய ராஜசேகரனை பிடிக்க காவலர்கள் முற்பட்டபோது, அவர் வீட்டை பூட்டிகொண்டு உள்ளே இருந்துகொண்டார்.

இதனை தொடர்ந்து காவலர்கள் வீட்டின் கதவை உடைத்து ராஜசேகரனை பிடிக்க முயன்றனர். அப்போது காவல்துறையினர் மீதும் ராஜசேகரன் பெட்ரோலை ஊற்றினார். பின்னர் ராஜசேகரன் வீட்டின் பின் பக்கமாக கையில் பெட்ரோல் கேனுடன் தப்பித்து ஓடினார். அதன் பின் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

இதில் அவர் மீது தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த காவல்துறையினர் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராஜசேகரனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, ராஜசேகரன் கோயில்களில் பூஜை செய்யும் வேலை பார்த்து வந்தார். கோயிலில் பூஜை வேலை செய்வதால் தன்னை வெங்கடேஷ், சதீஷ், காளி ஆகிய 3 பேரும் கிண்டல் செய்வதாக நினைத்துள்ளார்.

இதனால் காளியின் மனைவி குறித்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் அவதூறு பரப்பி உள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தாழ்வு மனப்பான்மை காரணமாக 3 பேர் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார். அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரிடம் விசாரித்து வருகிறோம். மனதளவில் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறார் என்று கூறினர்.

ABOUT THE AUTHOR

...view details