சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு பிரசித்திபெற்ற கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா செப்டம்பர் 30ஆம் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
விழாவின் 5ஆம் நாளான நேற்று அம்மன், வெள்ளி காமதேனு வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குமரி பகவதி அம்மன் திருவிழாவில், இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேஷியா சிங்கப்பூர் என வெளிநாடுகளிலும் அதிகப்படியான பக்தர்கள் கலந்து கொண்டனர்.