கரோனா வைரஸின் தாக்கம், தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மற்றொரு பக்கம் கரோனா வைரஸ் தொற்று குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் கண்ணன் கரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கரோனா விழிப்புணர்வு பாடல் பாடிய பேரூராட்சியின் உதவி இயக்குநர் இதற்கிடையில் இவர் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி, அதை சுகாதார பணியாளர்களுடன் இணைந்து பாடியுள்ளர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இவர் இதற்கு முன்பு சேலம் மாவட்டத்தில் பணியாற்றியபோது, டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் முதல் டெங்கு ஒழிப்பு மாவட்டமாக சேலத்தை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனாவிற்கு எதிராக கட்சி பாகுபாடின்றி இணைவோம் -வசந்தகுமார் எம்பி!