தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிய சிலம்ப போட்டி தொடங்கியது - கன்னியாகுமரி

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இந்தியா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய சிலம்ப போட்டி நேற்று தொடங்கியது.

சிலம்ப போட்டி

By

Published : Apr 27, 2019, 9:49 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக சிலம்ப கழகம் சார்பில் நான்காவது ஆசிய சிலம்ப போட்டி நேற்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து 250 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

சப்-ஜூனியர், சீனியர் என ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக சிலம்பம் மற்றும் வாள் பயிற்சியை செய்து காண்பித்தனர்.

வீரர்-வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக சிலம்பம் மற்றும் வாள் பயிற்சியினை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்

இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படவுள்ளன. ஆண்கள், பெண்களை ஐந்து பிரிவாக பிரித்து தனித்தனியாக 14 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த போட்டிகள் நடைபெறுகின்றன இப்போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 நடுவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details