மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தனது குடும்பத்தினருடன் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக புதன்கிழமை கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்.
கன்னியாகுமரிக்கு வந்த அவரை கோட்டாட்சியர் மயில் வரவேற்றார். காலை குமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், பின்னர் தனிப்படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சென்று சுற்றிப் பார்த்தார்.