ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படாத இதய நோய் சிகிச்சைப் பிரிவு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித பாதுகாப்பு கழகத்தினர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைப் பிரிவு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுவந்தது. இங்குக் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்திலிருந்தும் ஏராளமான ஏழை நோயாளிகள் இதய சம்பந்தமான பிரச்னைகளுக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இதய நோய் சிகிச்சைப் பிரிவு தொடங்கிய அரசு மருத்துவமனை! ஆனால் சிகிச்சை இல்லை! ஏன்? - இதய நோய் சிகிச்சை பிரிவு தொடங்கிய அரசு மருத்துவமனை
கன்னியாகுமரி: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு பல மாதங்களாகியும் செயல்படாமல் கிடப்பதால், இதய நோயாளிகள் உயிரிழக்க நேரிடுவதாக மனித பாதுகாப்பு கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் தற்போது அந்த பிரிவு செயல்படாமல் முடங்கிப்போய் உள்ளது. இதய நோய் சிகிச்சைப் பிரிவுச் செயல்படாததால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர். மேலும், இதய நோய் சம்பந்தமான பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்க நோயாளிகள் பல மாதம் காத்திருக்க வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்கள் இருக்கும் நிலையில், அந்த பிரிவு செயல்படாமல் இருப்பதால் ஏழை நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாத இதய நோய் பிரிவைச் செயல்பட வைக்கவும் வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.