கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, கடமான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்துவருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையை சார்ந்துள்ள கிராம பகுதிகளில் ஆரல்வாய்மொழி, குமரி - நெல்லை மாவட்டத்தின் எல்லைப் பகுதியாகும்.
ஆரல்வாய்மொழி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கிவருகின்றன. தற்போது, காற்று மூலம் மின் உற்பத்தி செய்யும் சீசன் என்பதால், ஆங்காங்கே உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி கணக்கெடுக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆரல்வாய்மொழியின் மூவேந்தர் நகர் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு, காவலாளி ஒருவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கண்ணெதிரே சிறுத்தைப் புலி ஒன்று தரையில் படுத்து கிடந்ததைக் கண்டு ஓட்டம் பிடித்து அலுவலகத்துக்குள் நுழைந்து அதிஷ்டவசமாக உயர்தப்பினார்.