கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களின் கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் அதிக துர்நாற்றத்தோடு, அதனை பயன்படுத்த முடியாத அளவிற்கு அசுத்தமாக இருக்கிறது என்று மாணவர்கள் குற்றம்சாட்டி வந்துள்ளனர்.
அரசு பள்ளியில் சுகாதாரமற்ற கழிவறை: மாணவர்கள் அவதி! - Aralvaimozhi govt schools toilets under maintence
கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழியில் உள்ள அரசு பள்ளியின் சுகாதாரமற்ற கழிவறையால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதென்று மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Aralvaimozhi govt schools toilets under maintence;
இந்நிலையில் கழிவறையில் குப்பைகள் அதிகளவில் சேர்ந்துள்ளதால் மாணவர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புழுக்கள், பூச்சிகள், ஈக்கள் மொய்க்கும் நிலையில் உள்ள அந்த சுகாதாரமற்ற கழிவறைகளை மாணவர்கள் மிகுந்த அவதியோடு கடந்து செல்கின்றனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.