கன்னியாகுமரி:செம்மண் கடத்தும் கும்பலோடு தொடர்பில் இருந்ததாக அஞ்சு கிராமம் காவல்நிலைய தலைமைக் காவலரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்பி ஹரிகரன் பிரசாத் உத்தரவிட்டு உள்ளார்.
மாவட்டத்தில் கனிமவள கடத்தல் தீவிரமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அஞ்சு கிராமம் சுற்று வட்டார பகுதிகளில் செம்மண் கடத்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செம்மண் கடத்தல் கும்பலோடு அஞ்சு கிராமம் காவல் நிலைய தலைமை காவலர் லிங்கேஷுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் வந்தன.