தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கன்வாடி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது - Nagarkovil

கன்னியாகுமரி: முறையான கால ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Nagarkovil
அங்கன்வாடி ஊழியர்கள்

By

Published : Nov 26, 2020, 7:39 PM IST

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், உதவியாளர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் என ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும், பணிக்கொடை ஊழியருக்கு 10 லட்சமும், உதவியாளருக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்,

பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியருக்கு வழங்குவதுபோல் போனஸ் எட்டாயிரத்து 300 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details