கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள் கவனமற்ற முறையில் பராமரித்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.
நோயாளிகள் அல்லது அவர்களோடு இருப்பவர்கள் ஊழியர்களிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டால் கோபத்தோடு பதில் சொல்வதும், நோயாளி என்றும் பாராமல் வெறுப்பு பேச்சுக்களை கொட்டுவதும் என பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை ஊழியர்களின் நோயாளிகள் மீதான அக்கறையற்ற தன்மையை வெளிக்காட்டும் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சியாக பரவி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
நோயாளியான மூதாட்டி ஒருவரை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ஸ்ட்ரசக்சரில் இழுத்துச் சென்ற ஊழியர் ஒருவர் மூதாட்டியை கடும் வெயிலில் ரோட்டில் போட்டுவிட்டு வேறு வேலைக்குச்சென்று அந்த வேலையை முடித்துவிட்டு பின்னர் ஸ்ட்ரக்சரை இழுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக பரவுகிறது. இதனிடையே உடல்நலம் குன்றிய நோயாளியான மூதாட்டி வெயிலில் அவதிப்பட்டார்.