தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அமமுகவினரை பணிய வைக்கத் திட்டமிடும் அதிமுக’ - Kumari District News

கன்னியாகுமரி: அமமுகவினரை பணிய வைப்பதற்காக அதிமுகவினர் பொய்யான புகார்களை கொடுத்து அச்சுறுத்தி வருவதாக அமமுக செயலாளர் செந்தில் முருகன் நாகர்கோவிலில் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

அமமுக செயலாளர் செந்தில் முருகன்
அமமுக செயலாளர் செந்தில் முருகன்

By

Published : May 24, 2020, 2:10 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப நாள்களாக அதிமுக மற்றும் அமமுகவினரிடையே இடையே பல்வேறு பிரச்னைகளில் மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் ஒருவர் மீது ஒருவர் விமர்சிப்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் தலைமையில் ஏராளமான அமமுகவினர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தனர்.

பின்னர் அமமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” அமமுக கட்சியினரை அதிமுகவினர் பணிய வைப்பதற்காகவும், பழி வாங்குவதற்காகவும் பல்வேறு புகார்களை கூறி வருகின்றனர். ஆதாரமில்லாமல் புகார்கள் கூறி வரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் சந்தோஷ், அதிமுகவிலிருந்து அமமுகவிற்கு வந்தவர். அதனால் அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொய்யான வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. இந்த வழக்கை உடனே ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:"இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்"- டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details