தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமமுகவில் மாற்று கட்சியினர் இணையும் விழா! - AMMK canted in nagarkovil

கன்னியாகுமரி: குமரி கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கட்சியில் இணையும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.

ammk-joining-function-in-nagarkovil

By

Published : Nov 6, 2019, 8:10 AM IST

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில். மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கட்சியில் இணையும் விழா நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் லட்சுமணன், மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெங்கின்ஸ், இளைஞர் அணி செயலாளர் செந்தில் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் அமமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்த அனைவரும் சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா, செய்தியாளர்களிடம் கூறுகையில்,

40 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைதேர்தல்களை சுயேட்சையாக சந்தித்த திறன் கொண்ட ஒரே தலைவர் டி.டி.வி. தினகரன் என அவர் கூறினார்.

அமமுக சார்பில் மாற்று கட்சிகளை கழகத்தில் இணைப்பு விழா

அமமுகவின் குமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் நேற்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நாடு முழுவதும் பத்து நாள் ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details