இந்துக்களின் முக்கியமான நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்றாகும். இந்த நாளில் மக்கள் பிரசித்திப்பெற்ற முக்கியமான புனித நீர்நிலைகளுக்குச் சென்று இறந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.
ஆடி அமாவாசை பூஜைக்கு தயாராகிறது குமரி கடற்கரை! - தர்பணம்
நாகர்கோயில்: குமரி கடற்கரையில் ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
kanyakumari seashore
இந்நிலையில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் இதற்காக ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டும், கடற்கரை அருகே அமைந்துள்ள சுற்றுச்சுவரில் உடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.