தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் அம்மா மினி கிளினிக் திறப்பு - டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம்'

கன்னியாகுமரி: தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட காட்டுப்புதூர் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கினை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார்.

amma mini clinics opened in kanyakumari
amma mini clinics opened in kanyakumari

By

Published : Dec 19, 2020, 4:47 PM IST

பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் என்ற பெயரில் சுமார் இரண்டாயிரம் கிளினிக்குகளை கிராமங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதாரம் நிலையத்திற்குள்பட்ட காட்டுப்புதூர் கிராமத்தில் சுமார் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தினை இன்று (டிச. 19) தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.

இந்த மினி கிளினிக்கில் ஒரு மருந்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு பல்வேறு நோய்களுக்குப் பரிசோதனை செய்துகொள்ளும் வசதிகள் உள்ளதுடன் சளி, காய்ச்சல் போன்ற எளிதாக சிகிச்சை அளிக்கக்கூடிய நோய்களுக்கு சிகிச்சை, மருந்துகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... திருப்பூரில் அம்மா மினி கிளினிக்கள் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details