தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அமித் ஷா வருகை மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும்!' - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

அமித் ஷா வருகை கன்னியாகுமரியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா வருகை கன்னியாகுமரியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும்
அமித்ஷா வருகை கன்னியாகுமரியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும்

By

Published : Mar 5, 2021, 10:54 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நாளை மறுநாள் (மார்ச் 7) தேர்தல் பரப்புரைக்காக கன்னியாகுமரி வருகிறார்.

இதற்கான மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 5) வடசேரியில் நடந்தது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அவருடன் மாவட்டத் தலைவர் தர்மராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்னன், தேசிய செற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமித் ஷா வருகை கன்னியாகுமரியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும்

முன்னதாக பேயன்குழி பகுதியில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் எல். முருகன் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம். அவர்கள் கட்சி சார்ந்த கொள்கையை வெளியிட்டுள்ளார்கள். பாஜக தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் அண்மையில் அமித் ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பும் எழுச்சியும் இருந்தன. அமித் ஷா வருகை கன்னியாகுமரியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த சசிகலா திமுக ஆட்சிக்கு வரக்கூடாது, ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

எங்கள் நோக்கமும் அதுதான். 2014-க்கு முன் இலங்கைக் கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் அதிகமாக நடந்தன. 2014-க்குப்பின் அதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை.

சமீபத்தில் நடந்த நான்கு மீனவர்கள் மரணம்கூட விபத்து என இலங்கை அரசு கூறுகிறது. அது குறித்து வெளியுறவுத் துறை மூலம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" என்றார்.

இதையும் படிங்க: அமித் ஷா உடன் நள்ளிரவு வரை நீண்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details