தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாஜக- அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்’ அமித் ஷா - BJp and aiadmk alliance

கன்னியாகுமரி: பாஜக-அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

amit shah
அமித் ஷா

By

Published : Mar 7, 2021, 1:44 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை (மார்ச்.7) சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து சுசீந்திரம் பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்று மோடி அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

செய்தியாளர்களைச் சந்திக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

அங்கிருந்து வாகனம் மூலம் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் தேர்தல் பரப்புரைக்காகச் சென்றார். முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’இங்கு திரண்டு இருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் மிகவும் திருப்தியாக இருக்கிறது. பாஜக- அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன். மோடி அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.

தற்போது நான் குமரியில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைத்துள்ளேன். பொன் ராதாகிருஷ்ணன், தனது அடுத்தகட்ட பரப்புரையைத் மேற்கொண்டு தனது வெற்றியை நிலை நாட்டுவார்’ என்றார்.

இதையும் படிங்க:'மதம் இல்லை; சாமி இல்லை; நீங்கள் தான் எனக்கு சாமி' கமல்ஹாசன்!

ABOUT THE AUTHOR

...view details