கன்னியாகுமரி: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து திமிங்கில எச்சம் ரயில் மூலம் மும்பைக்கு கடத்த இருப்பதாக மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ரயிலை வனத்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தடிக்காரன்கோணம் அருகே தோமையார்புரத்தை சேர்ந்த தினகரன் லாசர் (36) என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்ததில் அவரிடம் இரண்டு கிலோ திமிங்கல எச்சம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெருவிளையைச் சேர்ந்த அருள், மகேஷ், பார்வதிபுரத்தை சேர்ந்த திலீப் குமார், ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த சதீஷ், தம்மத்து கோனத்தை சேர்ந்த தங்கராஜ், ஆகிய 5 பேர் உள்பட 6 பேரை கைது செய்யப்பட்டனர்.