அகில உலக புலம்பெயர்வோர் நலன்காக்கும் அமைப்பின் மாநாடு நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் - மீன் பிடித்தல், வீட்டு வேலை, கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்காக வெளிநாடு செல்பவர்களின் நலன்காக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதன்படி, இன்று நடைபெற்ற புலம்பெயர் நலன்காக்கும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக, வெளிநாடுகளில் பணிக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு பிரச்னைகள் ஏற்படும்போது இந்திய நாட்டின் தூதரகங்கள் மூலமாக அதிக அக்கறை எடுத்து மத்திய அரசு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாட்டில் வேலை செய்யும்போது தொழிலாளர்கள் கொலைசெய்யப்பட்டாலோ அல்லது தண்டனைபெற்றாலோ சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.