தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு - கன்னியாகுமரியில் கல்லறை திருநாள்

கன்னியாகுமரி நாகர்கோவிலில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு
கன்னியாகுமரியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

By

Published : Nov 3, 2022, 9:01 AM IST

கன்னியாகுமரி: கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்சிகளில் ஒன்றான நவம்பர் 2 ஆம் தேதி இறந்தவர்களை நினைத்துப் பார்க்கும்விதமாக அனைத்து ஆன்மாக்கள் தினம் என்ற கல்லறை திருநாள் உலகம் முழுவதும் உள்ள கிறுஸ்தவர்கள் அணுசரித்து வருகின்றனர்.

அந்தவகையில் நாகர்கேர்கோவில் அடுத்த மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் வருகை தந்து தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் பூக்கள் தூவி, மாலை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

மறவன் குடியிருப்பு பகுதியில் பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல், அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதையும் படிங்க:ஈரோட்டில் மூன்றாவது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details