தமிழ்நாடு முழுவதும் உள்ள 45 லட்சம் ஓட்டுநர்களின் நலன்கருதி, சாலை வரி விலக்கு, வட்டியில்லா கடன் தொகையை செலுத்த கால அவகாசம், நிவாரணத்தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு அகில இந்திய ஓட்டுநர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மனுவில்; 'தமிழ்நாட்டில் சுமார் 45 லட்சம் ஓட்டுநர்கள் அகில இந்திய வாகன ஓட்டுநர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளனர். கரோனா தொற்று காரணமாக வேலை இன்றி இவர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இவர்களில் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத ஓட்டுநர்களுக்கு இதுவரை எந்தவிதமான நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனவே, பதிவு செய்யாத ஓட்டுநர்களுக்கும் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.