தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்திய மாணவ-மாணவியர் - போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்திய மாணவ மாணவியர்

கன்னியாகுமரி: மயிலாடியில் தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

alcohol awareness rally conducted by college students in kanyakumari
alcohol awareness rally conducted by college students in kanyakumari

By

Published : Jan 29, 2020, 6:50 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலையடுத்த மயிலாடி பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மயிலாடி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை அஞ்சு கிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிச்சை, கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்தப் பேரணியில் மயிலாடி பேரூராட்சி செயல் அலுவலர் அகத்தியலிங்கம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பேரணியாக சென்று போதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த பேரணியின்போது போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனால் ஏற்படும் நோய்கள் குறித்தும் விளக்கம் அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு மாணவ-மாணவிகள் வழங்கினர்.

விழிப்புணர்வு பேரணி நடத்திய மாணவ-மாணவியர்

இதையும் படிங்க: விளையாட்டு விபரீதமானதால் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details