தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருள்மிகு அழகம்மன் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசிப் பெருவிழா!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மாசிப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாசி பெருவிழா
மாசி பெருவிழா

By

Published : Feb 18, 2021, 6:20 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க பழைய திருக்கோயில்களில் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஒன்று. இந்தக் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா இன்று (பிப். 17) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி காலை கணபதி ஹோமம், இதனைத் தொடர்ந்து தேவார திருமுறை ஓதுதல் போன்றவை நடந்தன. இதனை அடுத்து செண்டைமேளம், நாதஸ்வர இன்னிசையுடன் கோயிலின் திருக்கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நாகர்கோயில் மட்டுமல்லாது சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நாள் திருவிழாவின்போதும் இன்னிசை மெல்லிசை நடக்கிறது.

அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசிப் பெருவிழா

ஒன்பதாவது திருவிழாவான வரும் 25ஆம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. பத்தாம் திருவிழா அன்று சுவாமிக்கும் அம்பாளுக்கும் ஆராட்டு விழா நடக்கிறது.

இதையும் படிங்க: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் வெள்ளித்தேர் உற்சவம்

ABOUT THE AUTHOR

...view details