தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிக்கு பாலியல் தொல்லை: எய்ட்ஸ் நோயாளி கைது - pocso

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த எய்ட்ஸ் நோயாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அ
ஃப்

By

Published : Jan 24, 2021, 12:08 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ். 22 வயதாகும் இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிகிறார். இவர் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதுபோல் நடித்து அவரை ஆசை வார்த்தைகள் கூறி அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

மாணவி மாயமானது குறித்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரையும், அவர் அழைத்து சென்ற மாணவியையும் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நாகர்கோவிலில் அவர்கள் இருவரும் நின்று கொண்டிருந்தபோது காவல் துறையினர் ஆட்டோ டிரைவர் ரதீஷை பிடித்து விசாரணை மேற்கொண்டு அவருடன் இருந்த மாணவியை மீட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ரதீஷிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் எயிட்ஸ் நோயாளி என அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details