பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார். இச்சூழலில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சசிகலாவுக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் ரேப்பிட், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், இன்று (ஜன. 22) அவருக்கு கடும் நிமோனியா காய்ச்சல் இருப்பதாக, விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சசிகலா பூரண நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.