கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடந்த விவசாய கண்காட்சியை பள்ளி தலைமையாசிரியர் கிளாட்வின் சௌந்தரா சென் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.
பொன் வேண்டாம் நெல் வேண்டும் - பள்ளி மாணவர்கள் அசத்திய விவசாய கண்காட்சி - கன்னியாகுமரி
கன்னியாகுமரி : அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ”பொன் வேண்டாம் நெல் வேண்டும்” என்ற வாசகத்தின் அடிப்படையில் விவசாய கண்காட்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்க்ள் அசத்திய விவசாய கண்காட்சி!.
”பொன் வேண்டாம் நெல் வேண்டும்” என்ற வாசகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விவசாய கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களும், பனை மரத்திலிருந்து கிடைக்கும் உபயோக பொருட்கள், தானியங்களில் உள்ள சக்திகள் குறித்து கண்காட்சியில் விளக்கப்பட்டது.