கன்னியாகுமரி மாவட்டம் ஆதலவிளைப் பகுதியில் பாசன கால்வாய் ஓடையை ஆக்கிரமித்து சிலர் கட்டடங்கள் கட்டியிருந்தனர். இதனை அகற்ற பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்றுவதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பொதுப்பணித்துறை முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜாக்குலின் தலைமையில் வந்த பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் பொதுப்பணித்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தகராறு ஏற்பட்டது.