தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களுக்கு தடை! - kanyakumari collector

நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்க்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு வடநேரே

By

Published : Mar 20, 2019, 10:04 PM IST

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு வடநேரே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீனப் பெருங்கெண்டை மீன் வகைகளான வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதா கெண்டை மற்றும் திலேப்பியா போன்ற மீன் வகைகளை தேர்வு செய்து, விவசாயிகள் மீன் வளர்ப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகளால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது, விற்பனை செய்வது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மீன் இனங்கள் மற்ற மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை அதி தீவிரமாக இரையாக உண்ண கூடியது. நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்துவிடும் தன்மை இந்த மீன் ரகத்துக்கு உண்டு.

ஆகையால், நமது நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழியும் அபாயம் உள்ளது. மேலும், இந்த மீன் இனங்கள் காற்றில் உள்ள பிராண வாயுவை சுவாசிக்கும் தன்மையும், மிகக் குறைந்த ஆழமுள்ள நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையும் உடையது. இந்த மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்கள் உடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு, அவற்றின் மரபியலை சிதைத்து பல்பெருக்கமடையும் வல்லமை உடையது. எனவே, மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பது, விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகார்கள், ஏதேனும் பெறப்பட்டால் அந்த மீன்களை முற்றிலும் அழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பொது மக்களும் இவ்வகை மீன்களை கொள்முதல் செய்ய வேண்டாம். மீன்வளத்துறை, மீன்வள பல்கலைகழகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்படும் மீன் இனங்களை மட்டுமே வளர்ப்பு செய்து மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக சேர்ந்து, அவ்வப்போது அரசு வழங்கும் சலுகைகள் வாயிலாக பயன் அடையலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details