தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கிய வாலிபர்கள்; தடுத்து நிறுத்திய காவலர் மீதும் சரமாரி தாக்குதல்

கன்னியாகுமரி கீரிப்பாறை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கிய இரண்டு வாலிபர்களை தடுத்து நிறுத்திய காவலர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில், இளைஞர்கள் இருவரையும் பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கிய வாலிபர்கள்; தடுத்து நிறுத்திய காவலர் மீதும் சரமாரி தாக்குதல்
மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கிய வாலிபர்கள்; தடுத்து நிறுத்திய காவலர் மீதும் சரமாரி தாக்குதல்

By

Published : Jan 3, 2023, 7:02 AM IST

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கிய வாலிபர்கள்; தடுத்து நிறுத்திய காவலர் மீதும் சரமாரி தாக்குதல்

கன்னியாகுமரி:கீரிப்பாறை சந்திப்பில் மனநலம் பாதித்த ராஜா என்பவரிடம் இரண்டு வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது கீரிப்பாறை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் விவேகானந்தன் இந்த சம்பவத்தை கண்டு வாலிபர்களை தடுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இரு வாலிபர்களும் காவலரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த காவலர் விவேகானந்தனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் அவர்களுக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர்.

இதனால் அவர்களும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களும் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சொர்ணராஜ், ஜெரின் ராஜ் ஆகிய இருவர் மீதும் கீரிப்பாறை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: இடுகாடாக பயன்படுத்தும் இடத்தில் அப்பார்ட்மென்ட் கட்ட முடிவு - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details