தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஆர்எஸ்எஸ் கொள்கையை கடைப்பிடிப்பதில் பாஜகவை அதிமுக மிஞ்சிவிட்டது’ - நல்லக்கண்ணு - overtake

கன்னியாகுமாரி: கோட்சே குறித்து கருத்து தெரிவித்ததற்காக மநீம தலைவர் கமல் நாக்கை அறுப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது மூலம் இந்துத்துவா கொள்கையை கடைபிடிப்பதில் பாஜக, ஆர்எஸ்எஸை அதிமுக மிஞ்சிவிட்டது என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

ஆர். நல்லகண்ணு

By

Published : May 14, 2019, 8:46 PM IST

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக வருகை தந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் மக்கள் குடிநீர் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருப்பதன் மூலம் மாநிலத்தை பாலைவனமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்து இருப்பதன் மூலமாக மத்திய அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிறது என்றும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் எந்த அடக்குமுறைக்கும் பயந்து நிற்க மாட்டார்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்றும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராடும் அவசியம் வந்துவிட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணு பேட்டி


மேலும், கோட்சே குறித்து கருத்து தெரிவித்ததற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் நாக்கை அறுப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது மூலம் இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிப்பதில் பாஜக, ஆர்எஸ்எஸை அதிமுக மிஞ்சிவிட்டது” என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details