தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்மா உணவகத்தில் விலையில்லா உணவுடன் முட்டையும் வழங்க குமரி அதிமுக மாவட்டச் செயலாளர் நிதியுதவி! - அம்மா உணவகம்

கன்னியாகுமரி: நாகர்கோவில், குளச்சல் ஆகிய பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகத்தில் முட்டையுடன் கூடிய விலையில்லா உணவு வழங்க தேவையான அனைத்து செலவுகளையும் அதிமுக குமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் மாவட்ட ஆவின் பெருந்தலைவருமான அசோகன் ஏற்றுக்கொண்டார்.

ADMK Kumari   District Secretary sponsored to provide eggs with free food at AMMA UNAVAGAM
அம்மா உணவகத்தில் விலையில்லா உணவுடன் முட்டையும் வழங்க குமரி அதிமுக மாவட்ட செயலாளர் நிதியுதவி!

By

Published : Apr 26, 2020, 4:01 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அதனைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன.

குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை முழுமையான ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்றுடன் 31 நாள்கள் ஆகும் நிலையில், வேலைவாய்ப்புகளை இழந்து நிற்கும் ஏழை எளிய மக்கள், தினக் கூலி தொழிலாளிகள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க பணம் இல்லாமல் அவதியுற்றுவருகின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டுமென அதிமுக தலைமைக்கழகம் அறிவித்ததையடுத்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் நிவாரணப் பணிகளில் இறங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல் நகராட்சிகளிலும் இயங்கிவரும் அம்மா உணவகங்களில் ஊரடங்கு உத்தரவு தளரும்வரை முட்டையுடன் கூடிய விலையில்லா உணவு வழங்க தேவையான அனைத்து செலவுகளை அதிமுக குமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாவட்ட ஆவின் பெருந்தலைவருமான அசோகன் ஏற்றுக்கொண்டார்.

இதற்காக முதற்கட்டமாக தனது சொந்த நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாயை மாநகராட்சி அலுவலர்களிடம் வழங்கினார். அதன்படி அம்மா உணவகம் மூலமாக தினமும் ஆயிரத்து 650 ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோருக்கு முட்டையுடன் கூடிய உணவு வழங்கப்பட்டுவருகிறது.

முன்னதாக, நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட உபகரணங்களை அசோகன் வழங்கினார். மேலும், அதிமுக சார்பில் வாகன வசதிசெய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் உணவுகளை நாள்தோறும் நேரடியாக வழங்கப்படுகிறது.

அம்மா உணவகத்தில் விலையில்லா உணவுடன் முட்டையும் வழங்க குமரி அதிமுக மாவட்டச் செயலாளர் நிதியுதவி!

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்வகையில் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஊடகத்துறையினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நிவாரண உதவி

ABOUT THE AUTHOR

...view details