தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெ. பிறந்தநாள்: பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு! - babies got ring from Admk on behalf of Jayalalitha birthday celebration

கன்னியாகுமரி: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த ஒன்பது குழந்தைகளுக்கு குமரி மாவட்ட அதிமுக சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

aasaripallam
aasaripallam

By

Published : Feb 25, 2020, 4:53 PM IST

தமிழ்நாடு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதுமட்டுமின்றி குமரி மாவட்ட அதிமுக சார்பில் ஆண்டுதோறும் ஜெயலலிதா பிறந்தநாளன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுவது வழக்கம்.

பிறந்த ஒன்பது குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா

அதேபோல், இந்த ஆண்டும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு மருத்துவமனையில் பிறந்த ஒன்பது குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இதில் அதிமுக நிர்வாகிகள், அரசு மருத்துவர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இதையும் படிங்க:'தலைவி' கதையால் எழுந்த பிரச்னை - இயக்குநர் விஜய் மீது எழுத்தாளர் புகார்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details