தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு - அதிமுகவினர் பொதுமக்களுக்கு முகக்கவசம் விநியோகம்! - corona virus in India

கன்னியாகுமரி: கரோனா வைரஸ் பரவலை தடுக்க அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், துண்டு பிரசுரம் , கை கழுவும் பொருள்கள் வழங்கப்பட்டது.

Admk corona awarenes
Admk corona awarenes

By

Published : Mar 18, 2020, 11:43 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு, பொதுநல அமைப்புகளுடன் இணைந்து மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி, இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

கரோனா விழிப்புணர்வு

இதைத் தொடர்ந்து, ஆவின் பால் நிறுவன ஊழியர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. இதுமட்டுமின்றி கை கழுவும் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கை கழுவும் பொருள்களும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:கரோனாவை அலட்சியமாக கையாண்ட பெண்ணின் தந்தை மீது எஃப்ஐஆர் பதிவு!

ABOUT THE AUTHOR

...view details