உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் தொற்றிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லாதப்பட்சத்திலும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் அரசின் உத்தரவினை ஏற்று நூற்றுகணக்கான தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.
விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து வரும் 31ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. பிரசித்திப்பெற்ற குமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயில் ஆகியவை மூடப்பட்டுள்ளன.