மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டி ஏராளமானோர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதும், போதை பழக்கத்திற்கு அடிமையாகி கல்வி மீதான கவனம் சிதறி மாணவர்களின் வாழ்க்கை மாறுவது அண்மை காலங்களில் பரவலாக மாறிவரும் சூழலில் இதுகுறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் கேப் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் இருநூறுக்கும் மேற்பட்டோர் பதாதைகளுடன் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பை வலியுறுத்தும் விதமாகவும், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.
குமரி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி! கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி நாகர்கோவிலின் முக்கிய வீதிகளின் வழியே கடந்து சென்று இறுதியில் கல்லூரி வளாகத்திற்குள் நிறைவுப் பெற்றது. பேரணியின் முடிவில் போதைப் பொருள் எதிர்ப்பு, சாலை பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவர்களால் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது குறித்து பேரணி ஒருங்கிணைப்பாளர் ஐயப்ப கார்த்தி கூறுகையில், மாணவ மாணவிகளிடையே போதை பழக்கத்தை ஒழிக்கவும், வாகன விபத்துகளுக்கு காரணமான குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை தடுக்கவும், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் இந்த பேரணி நடைபெறுவதாக கூறினார்.
இதையும் படிங்க : 'ஒன்ன தொட்ட மூன தூக்குவோம்' - பாஜகவுக்கு சவால்விடும் காங். அமைச்சர்