தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எனக்கும் மநீம கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது' - மநீம வேட்பாளருக்காக களமிறங்கிய கஸ்தூரி - Actress Kasturi campaigning in Kanyakumari

கன்னியாகுமரி: "நான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் கிடையாது, எனக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் தனிப்பட்ட முறையில் செல்வகுமார் நல்லவர் என்பதற்காக பேச வந்துள்ளனே்" என்று தேர்தல் பரப்புரையில் நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் நடிகை கஸ்தூரி பரப்புரை
கன்னியாகுமரியில் நடிகை கஸ்தூரி பரப்புரை

By

Published : Mar 27, 2021, 6:34 AM IST

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து அஞ்சுகிராமத்தில நடிகை கஸ்தூரி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "செல்வகுமார் இந்தப் பகுதி மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளார். நீங்கள் அவரை இழந்து விடக்கூடாது, எனவே அவரை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுங்கள்.

தேர்தலுக்கு முன்னரே தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரியாமலே மக்களுக்கு பல நன்மைகளை இவர் செய்து கொடுத்துள்ளார் என்றால், தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்காக என்னவெல்லாம் செய்வார் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

கன்னியாகுமரியில் நடிகை கஸ்தூரி பரப்புரை


கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ ஆஸ்டினை உங்களுக்கு தெரியுமா? தெரியாது. ஏனென்றால் அவர் தொகுதி பக்கமே வருவதில்லை. அவர் ஏற்கனவே தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து தாவி தாவி தற்போது திமுகவில் தஞ்சம் அடைந்துள்ளார். யாருக்கு தெரியும் தேர்தல் முடிந்த பின்னர் அவர் மக்கள் நீதி மையம் கட்சியில் கூட வந்து சேரலாம்.

நான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் கிடையாது. எனக்கும் இக்கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் தனிப்பட்ட முறையில் செல்வகுமார் நல்லவர் என்பதற்காக மக்கள் மத்தியில் பேசுவதற்காக வந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details