தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி - விஜய் வசந்த் கோரிக்கை! - நடிகர் விஜய் வசந்த்

கன்னியாகுமரி: மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை தேடி கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி, சாட்டிலைட் ஃபோன் போன்றவற்றை உடனடியாக ஏற்படுத்தித்தர அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

vijay vasanth
vijay vasanth

By

Published : Nov 21, 2020, 3:30 PM IST

நாகர்கோவிலில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் மீனவர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், மறைந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகனுமான நடிகர் விஜய் வசந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ” தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக மறு சீரமைப்பு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல உயிர்களை பலி வாங்கிய பின்னரும் இது குறித்து அரசு மெத்தனம் காட்டாமல் இதனை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

காணாமல் போகும் மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் மற்றும் சேட்டிலைட் ஃபோன் வசதி போன்றவற்றை ஏற்படுத்தித்தர வேண்டும். மீனவர்களுக்கான நலவாரியம் துவங்கப்பட்ட பின்னரும், இதுவரை ஒரு மீனவர் கூட பென்ஷன் வாங்காதது வேதனையானது. எனவே அதனை மீனவர்களுக்கு பெற்றுத்தர வேண்டியது அவசியம் “ என்றார்.

மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி - விஜய் வசந்த் கோரிக்கை!

இதையும் படிங்க: கோவை அவினாசி சாலையில் 9 கி.மீ. துாரத்திற்கு புதிய மேம்பாலம்!

ABOUT THE AUTHOR

...view details